திருகோணமலை-சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியிலுள்ள கடற்கரையில் கத்திக்குத்துக்கு இலக்கான ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இச்சடலம் இன்று (30) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் புத்தளம்-காரியப்பர் வீதி முஹம்மது ஹனிபா ஹாரிஸ் (60 வயது) எனவும் தெரியவருகின்றது.
கல்லடி - மீன்வாடி கடற்கரை பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதினாலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கத்தியால் குத்திய நபர் தான் ஒருவரை கொலைசெய்துள்ளதாக தெரிவித்துவிட்டு உடப்பு- தானஞ்சோலை, 05ம் வட்டாரத்தைச் சேர்ந்த குமாரவேல் சுப்பிரமணியம் (49வயது) என்பவர் வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள இராணுவ முகாமிற்குள் புகுந்துள்ளார்.
இந்நிலையில் சந்தேகநபரை இராணுவத்தினர் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கத்திக்குத்துக்கு இலக்கான வயோதிபரின் சடலம் தற்பொழுது சம்பவ இடத்திலேயே காணப்படுவதாகவும் மரணம் தொடர்பில்
சேருநுவர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment