(அப்துல்சலாம் யாசீம்)
எமது கட்சி ஆட்சி அமைக்கின்ற போது 24 மணித்தியாலத்துக்குள் எரிபொருளின் விலையை குறைப்பேன் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
திருகோணமலை நகராட்சி மன்றத்தில் இன்று (03) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில்-
ஐக்கிய மக்கள் சக்தியுடைய வேலைத்திட்டங்களை உங்களுக்கு நான் தெளிவுபடுத்த வேண்டும்.
இன்றைய அரசாங்கம் வேலை செய்ய இயலாத அரசாங்கம் என்று தான் சொல்ல வேண்டும்.
அதற்கு உதாரணமாக இந்த அரசாங்கம் செய்திருக்கின்ற ஒரு விடயத்தை பற்றி உங்களுக்கு சொல்லுகின்றேன்.
2011ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் குழுவினரை இன்று எந்த வித குற்றங்களும் இல்லாமல் இன்று விசாரணைக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். இதில் முன்னாள் தலைவர் குமார சங்கக்காரர், உபுல் தரங்க அதேபோல் தற்போது மஹேல ஜெயவர்தன மறைத்திருக்கிறார் ஆனால் நேற்றிரவு திடீரென தொலைபேசியில் மஹேல ஜெயவர்த்தன விசாரணைக்கு வர வேண்டாம் என தெரிவித்திருக்கின்றார்.
தற்போது வந்திருக்கின்ற முடிவு என்ன 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் குழுவினர் குற்றவாளிகள் என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.
அன்பான நண்பர்களே நாங்கள் எல்லோரும் ஒரு கூட்டமைப்பாக இணைந்து இதற்கு எதிராக குரல் கொடுத்த படியினால் இன்று அரசாங்கம் அதற்கு எதிர்மறையாக இவ்வாறு குற்றத்தை சுமத்தி இருக்கிறது.
ஆகவே எமது கட்சி ஆட்சி அமைக்கின்ற போது நிச்சயமாக இவ்வாறு பொய் கூறுபவர்களை சட்டத்துக்கு முன் கொண்டு வருவேன் என்பதை இந்த இடத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.
அது மாத்திரமல்ல மக்கள் அனைவரும் எமது கட்சியை வெற்றி பெறச் செய்தமைக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
ஆகவே எதிர்வரும் ஆறாம் திகதிக்கு பின் திருகோணமலை மாவட்டத்தில் இருக்கின்ற 729 கிராமங்களை கிராம ஆட்சி நகரங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
அது மாத்திரமல்ல இம்முறை வெற்றி பெற்றால் திருகோணமலை மாவட்டத்தில் வீட்டு பிரச்சினைக்கு தீர்வு மற்றும் இளைஞர்களுக்குறிய தொழில் வாய்ப்பு, மீனவர்களுக்கு சலுகைகள் அடிப்படையிலான தீர்வுகளும் அதேபோல் எமது கட்சி ஆட்சி அமைக்கின்ற போது 24 மணித்தியாலத்துக்குள் எரிபொருளின் விலை குறைப்பு என்பதையும் மக்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
ஆகஸ்ட் மாதம் ஆறாம் திகதி எமது கட்சி ஆட்சி அமைக்கிறது.
உங்கள் பெறுமதியான வாக்குகளை பெற்று தாருங்கள் என்று உங்களுடன் தாழ்மையாக கேட்டு கொள்கின்றேன். எனவும் கோரிக்கை விடுத்தார்.
இந்நிகழ்வில் ஐக்கியமக்கள் சக்தியில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment