(அப்துல்சலாம் யாசீம்)
கொவிட் 19 நோயாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முகமாக பாரம்பரிய ஆயுர்வேத மருந்துகள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்தினால் வழங்கிவைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரனிடம் இன்று (18) இம்மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் 75வது பிறந்த தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக கிழக்கு மாகாணத்தில் கொவிட் 19 நோயாளர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முகமாக இம்மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டது.
நிக்கவெரடிய பாரம்பரிய ஆயுர்வேத வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சதுன் கொட்டியாவத்தவினால் இந்த மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டதாகவும் கிழக்குமாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வின் போது கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பீ. வணிகசிங்க மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.பீ.மதனாயக்க ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment