காதலர் தினத்தில் மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ மூட்டிய கணவருக்கு மரண தண்டனை! - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

காதலர் தினத்தில் மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ மூட்டிய கணவருக்கு மரண தண்டனை!

Share This

 


(பதுர்தீன் சியானா)


காதலர் தினத்தன்று தனது மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து  தீர்ப்பளிக்கப்பட்டது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று (18) இத்தீர்ப்பினை வழங்கினார்.

இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் திருகோணமலை-இல 38/1 பாடசாலை வீதி,ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஹெந்த ஹேவகே அனுர இஷாந்த (38வயது) எனவும் தெரியவருகின்றது.

2018ஆம் ஆண்டு இரண்டாம் மாதம் 14ஆம் திகதி காதலர் தினத்தன்று கந்தளாய்-அக்போபுர பகுதியில்  மனைவி கையடக்கத் தொலைபேசியில் உடம்பில் ஆடையின்றி வீடியோ இணைப்பில் பேசிக்கொண்டிருந்தபோது  தான் குறுக்கே வந்ததால் தானாகவே எறிந்து கொண்டதாகவும் குற்றவாளியின் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பெட்ரோல் ஊற்றி கொலை செய்த குற்றத்திற்காக 2019ம் ஆண்டு 04ம் மாதம் 12ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த எதிரிக்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றில் குற்றப்பகர்வு  பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவர் தனது மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து மரணம் ஏற்படுத்தியமை இலங்கை தண்டனை சட்டக்கோவை 296 பிரிவின்கீழ் இவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

 குறித்த குற்றவாளிக்கு சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் பற்றி திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் திறந்த நீதிமன்றில் தமது  தீர்ப்பினை வாசித்துக் காட்டினார் இந்நிலையில் குறித்த குற்றவாளி தனது மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து மரணம் விளைவித்தமை தொடர்பில் இவருக்கு மரண தண்டனை விதிக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டார்.

No comments:

Post a Comment

Pages