திருகோணமலை-புடைவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலயக் காணியை கனிய மணல் அகழ்வுக்காக புல்மோட்டையில் மனைக்கூட்டுத்தாபனத்துக்கு வழங்கியமை தொடர்பில் பொதுமக்களுக்கு உள்ள சந்தேகம் நிவர்த்திக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கேட்டுள்ளார்.
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு அவர் கேட்டுள்ளார்.
புடவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலயக் காணி கனிய மணல் அகழ்வுக்காக புல்மோட்டை இல்மனைக் கூட்டுத்தாபனத்துக்கு 3 மாத காலத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளரே இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.
3 மாத காலத்தின் பின் இந்தக் காணியை பாடசாலைக்கு மீள ஒப்படைக்க வேண்டும். இதன்போது மணல் அகழ்வுக்காக அகற்றப்படும் கட்டடம் மீளமைக்கப் பட்டு காணி மாணவர்களுக்கான விளையாட்டு மைதானமாக செப்பனிடப்பட்டு மீண்டும் பாடசாலைக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையிலேயே இக்காணி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் புல்மோட்டையில் மனைக் கூட்டுத்தாபனம் இந்த நிபந்தனைப்படி செயற்படுமா என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு உள்ளது. ஏனெனில் கடந்த காலங்களில் புல்மோட்டையில் மனைக் கூட்டுத்தாபனத்தினால் புடைவைக்கட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இது போன்று இந்த விடயத்திலும் ஏமாற்றப்பட்டு விடுவோமா என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது. எனவே தங்களால் வங்கப்பட்ட இந்த நிபந்தனை புல்மோட்டையில் மனைக் கூட்டுத்தாபனத்தினால் நிறைவேற்றப்பட வில்லையாயின் அதனை நிறைவேற்றச் செய்வதற்கு தாங்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன? என்பது குறித்து பொதுமக்கள தங்களது கருத்தை அறிய ஆவலாக உள்ளனர்.
எனவே இது குறித்து தங்களது தீர்மானத்தை அறியத்தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கடிதத்தின் பிரதிகள் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் புடைவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலய அதிபர் மற்றும் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் இம்ஜாத
ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment