(அப்துல் சலாம் யாசீம்)
கிண்ணியா பிரதேச சபையின் புதிய தவிசாளராக கே.எம்.நிஹார் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்
கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச்.சைபுதீன் அண்மையில் இராஜினாமா செய்திருந்தார்.அதற்கான வெற்றிடத்தை நிரப்பும் வகையில் இன்று (17) கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் தெரிவு நடைபெற்றது
தவிசாளர் தெரிவின் போது கே.எம்.நிஹார் அவர்களை உறுப்பினர் ஏ.ஆர்.அஸ்மி பிரேரித்ததுடன் எம்.எச்.சைபுதீன் ஆமோதித்திருந்தார்.
உறுப்பினர் எஸ்.எம்.நஸீர் தான் தவிசாளர் பதவிக்கு போட்டியிடுவதாக தெரிவித்திருந்தார் அதனை ஏற்த முடியாது எனவும் போட்டியிடுபவர்களை உள்ளூராட்சி சட்டத்தின்படி மற்றொருவர் பிரேரித்து ஆமோதிக்க வேண்டும் எனவும் ஆணையாளர் தெளிவுபடுத்தினர்.
தவிசாளராக யாரும் யாரையும்
முன்மொழியாத காரணத்தினால் போட்டியின்றி கே.எம்.நிஹார் கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதாக உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்தார்.
இவர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அவர்களின் பிரந்தியோக செயலாளராக இருவருடங்கள் செயற்பட்டுள்ளார், ஏற்கனவே கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளராக பதவி வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment