கொட்டியாப்புரப்பற்று சர்வதேச ஒன்றியத்தினால் மூதூரில் சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க நிதி! - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

கொட்டியாப்புரப்பற்று சர்வதேச ஒன்றியத்தினால் மூதூரில் சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க நிதி!

Share This

 


திருகோணமலை-மூதூர் பிரதேசத்தில் தனிமைப்படுத்தலில்  ஈடுபடுத்தப்பட்டுள்ள 50 குடும்பங்களுக்கு  கொட்டியாபுரப்பற்று சர்வதேச ஒன்றியத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மூதூர் சமூக சேவையாளரும், திடீர் மரண விசாரணை அதிகாரியுமான டொக்டர் லாபீர் அவர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கையினையடுத்து இப்பொருட்கள் வழங்குவதற்குரிய நிதி வழங்கப்பட்டுள்ளது.

லண்டனைச் சேர்ந்த கொட்டியாப்புரபற்று சர்வதேச ஒன்றியத்தின் தலைவர் கந்தையா இராசநாயகம் மற்றும் சுவிஸ் நாட்டில் வசித்து வரும் கந்தையா கோணேஸ்வரன் ஆகியோரினால் இந்நிதி வழங்கப்பட்டதாகவும் மூதூர் சமூக சேவையாளரும்,திடீர் மரண விசாரணை அதிகாரியுமான டொக்டர் லாபீர்  தெரிவித்தார்.

இதனையடுத்து  மூதூர் அனர்த்த சமூக சேவைகள் நலன்புரி சங்கம் தமது  மக்களுக்காக வழங்கிய உதவியினை மறக்க மாட்டோம் எனவும் கொட்டியாபுரப்பற்று சர்வதேச ஒன்றியத்திற்கு  நன்றிகளை தெரிவித்து நன்றி நவிலல் கடிதத்தையும் அனுப்பி வைத்துள்ளனர்.

இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்களுக்கு உதவிகள் செய்ய விரும்பினால் TRINCO MEDIA ஊடக வலையமைப்புடன் (0777004772)  தொடர்பு கொள்ளுமாறும் தனவந்தர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments:

Post a Comment

Pages