(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை பொது வைத்தியசாலையில் மூன்று வைத்தியர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு வைத்தியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.
இன்று (10) திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த 27 ஆம் திகதி கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த வைத்தியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவ்வைத்தியருடன் தொடர்புகளைப் பேணி வந்த மூன்று வைத்தியர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலை விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில் மூவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் ஒரு வைத்தியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த வைத்தியரை IDH மருத்துவமனைக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.
இவ் வைத்தியர்கள் மகப்பேற்று பெண் நோயியல் பிரிவில் கடமையாற்றி வந்தவர்கள் எனவும் தெரியவருகின்றது.
No comments:
Post a Comment