(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-மொரவெவ பிரதேச சபை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி வசம் இருந்த போதிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்தது.
மொரவெவ பிரதேச சபையின் 2021ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் இரண்டாவது தடவையாக இன்று (31) பிரதேச சபையின் தவிசாளரும்,தெவனிபியவர விகாரையின் விகாராதிபதியுமான பொல் ஹேன்கொட உபரத்ன தேரரினால் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பிற்கு விடப்படாமல் நிறைவேற்றப்படயிருந்த காரணத்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் சபையில் வாக்கெடுப்பு கோரி கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் எப்.எம்.அஸ்மிர் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ஆர்.எம் சாலிய ரத்னாயக்க, மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் டி.ராஜமணி ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர்.
இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் டபிள்யூ.ஆர்.ஜகத் குமார வேரகொட ,சித்ரவேல் சசிகுமார்,பீ.பீ.ஜி.சம்பத் சிறிசேன, யூ.எம்.கே.ஜீ.ரத்னாயக்க,
எம்.டி.ரத்னாயக்க கே.ஏ.றுவன் குமார,எச்.ஜீ.கே.மதுசிகா,டெக்லா ஜயசிங்க ஆகியோரும்,
ஐக்கிய தேசிய கட்சி சார்பில் வை.டி.ஜெனீர்தீன்,ஆர்.எம்.எஸ். விஜேசிங்க, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் ஆர்.எம்.வினிதா மெனிகே ஆகியோரும் எதிராக வாக்களித்தனர்.
இந்நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஏ.எஸ்.எம்.பைசர் மொரவெவ பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு சுகயீனம் காரணமாக சமூகம் தரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருந்த போதிலும் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது வரவு செலவுத் திட்டத்தின் போது இவர் நடுநிலையாக இருந்ததாகவும் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த பிரதேச சபையின் தவிசாளர் பொல்ஹேன் கொட உபரத்ன தேரர் ஆகியோர் நடுநிலையாக செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மொரவெவ பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் மேலதிக 11 வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது.
No comments:
Post a Comment