திருகோணமலை பொது வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி என ஆள் மாறாட்டம் செய்த இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக தெரிய வருகின்றது.
இச்சம்பவம் இன்று (31) காலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர் திருகோணமலை- சல்லி சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த காளிமுத்து ஸ்ரீகரன் (38) எனவும் கடந்த வருடம் திருகோணமலை -ஜமாலியா பகுதியில் இஸ்லாம் மதத்தை தழுவி முஹம்மட் ஆதில் என பெயர் மாற்றி உள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த இளைஞர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு நீதியமைச்சர் அலி சப்ரியினால்
விஷேடமாக நியமிக்கப்பட்டிருந்ததாகவும் கொரோனா தொடர்பில் கண்காணிப்பதற்காக நேரடியாக அவரை நியமித்துள்ளதாகவும் அங்கு கடமையில் உள்ள ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த நபர் தொடர்பில் திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளர் உட்பட விஷேட வைத்திய நிபுணர்களுக்கு தெரியப்படுத்தியதைடுத்து பணிப்பாளர் பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து குறித்த நபரை கைது செய்து துறைமுகம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தெரியவருகின்றது.
கடந்த 2013ஆம் ஆண்டு நுகர்வோர் அதிகார சபையில் வேலை செய்பவர்களை போல நடித்து கடை உரிமையாளர்களிடம் பணம் கொள்ளை அடித்த சம்பவம் தொடர்பில் வழக்கு இருந்ததாகவும் தெரியவருகின்றது.
No comments:
Post a Comment