(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-புளியங்குளம் பிரதான வீதி இரண்டாவது ஒழுங்கை 1993 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை புனரமைக்கப்படவில்லையென அங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த ஒழுங்கையில் 16 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் 1993ஆம் ஆண்டு தொடக்கம் இப்பகுதியில் வசித்து வருவதாகவும் அன்று தொடக்கம் இன்றுவரை குண்டும் குழியுமாக காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் பாடசாலை சீருடைகள், பாதணிகள் ஒவ்வொரு நாளும் ஊத்தையாக காணப்படுவதாகவும் பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சில நேரங்களில் அவ் வீதியால் செல்பவர்கள் விழுந்து செல்லக் கூடிய நிலை ஏற்படுவதாகும் அவ்வீதியால் சென்ற பாடசாலை மாணவிகள் விழுந்து காயமடைந்து நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் குறிப்பிடுகின்றனர்.
தேர்தல் காலங்களில் மாத்திரம் அரசியல்வாதிகள் வருகை தந்து வீதிகளை புனரமைத்து தருவதாகவும் தங்களுக்கு வாக்குகளை அளிக்குமாறு அன்று தொடக்கம் இன்றுவரை கூறி வருகின்றனர்.
எனவே தங்களுடைய வீதியை புனரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
No comments:
Post a Comment