(பதுர்தீன் சியானா)
திருகோணமலை-கந்தளாய் பிரதான வீதி ஜயபுர பகுதியில் சீமேந்து ஏற்றிச் சென்ற லொறியும், முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்றிரவு (07) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்ஙள் திவுலபிடிய,படேபொல பகுதியைச் சேர்ந்த கே. நதீக சம்பத்குமார (38வயது) மற்றும் புத்தளம்-முந்தலம பகுதியைச் சேர்ந்த விஜயசிங்க ஆராய்ச்சிலாகே இஷான் சமிந்த (35வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை லொறியின் சாரதியான ஊறுவத்த, கதன்ஹேனவத்த பகுதியைச் சேர்ந்த பத்தினிகே பியனந்த (58வயது) என்பவரை கைது செய்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று கந்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தம்பலகாமம் பொலிசார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனை முடிவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment