கோவிட் -19 காரணமாக கிழக்கு மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் 32 பாடசாலைகளை தவிர மற்ற அனைத்தும் நாளை மீண்டும் திறக்கப்படும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.
அதன்படி, காத்தான்குடி பகுதியில் 25 பாடசாலைகளும், கல்முனை பகுதியில் ஐந்து பாடசாலைகளும், திருக்கோவில் பகுதியில் ஒரு பாடசாலையும், அம்பாறையில் ஒரு பாடசாலையும் மேலும் மூடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத், மாகாண கல்வி பணிப்பாளர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் உட்பட அதிகாரிகளின் கலந்துரையாடலின் போதே தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment