இறந்தவர்களுக்கு மரியாதை செய்வதற்கு தூபி அவசியம்-டக்ளஸ் - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

இறந்தவர்களுக்கு மரியாதை செய்வதற்கு தூபி அவசியம்-டக்ளஸ்

Share This


இறந்தவர்களுக்கு மரியாதை செய்வதற்கு தூபி ஒன்று அவசியம் என மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.


திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்று (09) இடம்பெற்ற கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் தேசியத் திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்று   முடிவடைந்த பின்னர் ஊடகவியலாளரொருவர் யாழ் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்ட தூபி உடைக்கப்பட்டமை தொடர்பில் கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.

முக்கியமாக இறந்தவர்களை நினைவு படுத்துவதற்காகவும் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காகவும், மத வழிபாடுகளை செய்வதற்காகவும் கட்டாயம் நினைவு தூபி தேவை எனவும் அவர் குறிப்பிட்டார்.

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இரவோடு இரவாக அழிக்கப்பட்டுள்ளதாக அரிய கிடைத்துள்ளதாகவும், அந்த நினைவேந்தல் தூபி இரவோடு இரவாக கட்டப்பட்ட செய்தியை  நினைவு கூறுவதாகும் மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது குறிப்பிட்டார்.




No comments:

Post a Comment

Pages