(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் புதுவருட சத்தியப்பிரமான நிகழ்வும், கடமை ஆரம்பிக்கும் நிகழ்வும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தலைமையில் இடம்பெற்றது.
புதுவருட சத்தியப்பிரமாண நிகழ்வில் மாவட்ட நீதிபதி பெருமாள் சிவகுமார், நீதிபதி சமிலா குமாரி ரத்னாயக்க மேலதிக நீதவான் ரந்திக்க லக்மால் ஜெயலத் ஆகியோர் உட்பட நீதிமன்ற பதிவாளர்கள் பொலிசார் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது விஷேடமாக கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பாகவும், நிறுவனங்கள் கடமையாற்ற வேண்டியது எப்படி என்பது பற்றியும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் கடமையாற்றும் சிரேஸ்ட வைத்தியர் வீ.கௌரீஸ்வரன் இதன்போது தெளிவு படுத்தினார்.
இதேவேளை அரச ஊழியர்கள் மக்களுக்கு சிறந்த சேவையை சுகாதார விதிமுறைகளை பின்பற்றி வழங்கவேண்டுமெனவும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அத்துடன் தேசியக்கொடியை மேல் நீதிமன்ற நீதிபதி ஏற்றியதுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment