கொரோனா அச்சுறுத்தல்-முடங்கியது திருகோணமலை நகரம் - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

கொரோனா அச்சுறுத்தல்-முடங்கியது திருகோணமலை நகரம்

Share This

 


(அப்துல்சலாம் யாசீம்)

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக திருகோணமலை நகரம் முடங்கியுள்ளது.

திருகோணமலை மத்திய வீதியில் கொரோனா  தொற்றாளர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த வீதியானது முடக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நகர் பகுதியில் எழுமாற்றாக நடாத்தப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில், நேற்றையதினம் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து குறித்த கடை தொகுதிகளில் பணி புரியும் வேலை ஆட்களுக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பரிசோதனையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மத்திய வீதி ஆனது மணிக்கூட்டு கோபுர சந்தியில் இருந்து சம்பத் வங்கி சந்தி வரை மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளுக்காக குறித்த பகுதியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதைவேளை மேலும் முடக்கப்படாத பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்ததது.





No comments:

Post a Comment

Pages