திருமலையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் நினைவேந்தல் (வீடியோ இணைப்பு) - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

திருமலையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் நினைவேந்தல் (வீடியோ இணைப்பு)

Share This




திருகோணமலை கடற்கரையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் நினைவேந்தல் நிகழ்வு  திருகோணமலையில் இடம்பெற்றது.

திருகோணமலை மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று (02) நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதி பொதுச்செயலாளர்  கலாநிதி ஸ்ரீ ஞானேஸ்வரன் அவர்களினால் இந்நினைவேந்தல் நிகழ்வு நடாத்தப்பட்டது.

இதன்போது நினைவேந்தலை கூட நடாத்துவதற்கு பாதுகாப்பு படையினர், புலனாய்வுத்துறையினர் பல கேள்விகளை கேட்பதாகவும், நினைவேந்தலை கூட நடாத்துவதற்கு உரிமையில்லையா? எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.


அத்துடன் சர்வதேச விசாரணையூடாக மட்டுமே ஐந்து மாணவர் படுகொலைக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளமுடியும்  எனவும் அவர் குறிப்பிட்டார்.

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி திருகோணமலைக் கடற்கரையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 15 ஆம் வருடத்தினை இன்று 2021 ஜனவரி 2ஆம் திகதி நாம் நினைவேந்துகின்றோம்.


இம்மாணவர்களின் படுகொலையுடன் சம்பந்தப்பட்டதாக சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையின் பன்னிரெண்டு படையினர் உட்பட சாதாரண காவல்துறை அதிகாரி ஒருவரையும் குற்றம் சாட்டி விசாரணைகளுக்கு உட்படுத்தியிருந்த போதிலும் ”போதுமான சாட்சியங்கள் இல்லை” என்ற காரணத்தினால் அவர்கள் கடந்த ஜூலை 03, 2009 இல் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் அடக்குமுறைக்கு எதிராகத் திருகோணமலை மாவட்டத் தமிழ் மக்களின் தன்னெழுச்சியை அடக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இந்த அப்பாவி மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

ஆனாலும் படுகொலையைச் செய்தவர்கள் யார் என்பதைச் சிறீலங்காவின் நீதிப்பொறிமுறையால் கண்டுபிடிக்க முடியாமல் போயிருப்பதானது மிகப்பெரும் கேள்வியோன்றை ஈழத்தமிழ் மக்களின் முன்னே விட்டுச்சென்றிருக்கின்றது. 


இவ் ஐந்து மாணவர் படுகொலைக்கு முன்னராகவும் பின்னராகவும், 2009 ஆம் ஆண்டில் சிறீலங்கா அரசின் ஆசீர்வதிப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இனப்படுகொலைக்கும் உள்நாட்டு நீதிப்பொறிமுறை நீதி வழங்குமா என்பதே அக்கேள்வி. 

அந்தக் கேள்விக்கு பதிலாக சிறீலங்காவின் நீதிப்பொறிமுறை என்றுமே தமிழ்மக்களுக்கான நீதியை வழங்கப்போவதில்லை என்பதைத் தமிழ் மக்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்கள். 

 
எனவே  சர்வதேச விசரணையைக் கோரி அனைத்துத் தமிழ் மக்களும் ஓரணியில் திரள வேண்டும் எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.



No comments:

Post a Comment

Pages