(அப்துல்சலாம் யாசீம்)
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளரும்,கிண்ணியாவைச் சேர்ந்த ஏ.ஸீ.எம்.முஸ்இல் எழுதிய " நமது இலக்கிய ஆளுமைகள் - 1 "நூல் வெளியீட்டுவிழா நேற்று ( 28 ) ஞாயிற்றுக்கிழமை காலை பொது நூலக மண்டபத்தில் இடம்பெறும்.
இலக்கிய ஆர்வலரும், நீதிமன்றப் பதிவாளருமான எம்.எஸ்.எம்.நியாஸ் தலைமையில் இடம் பெற்ற இவ்வைபவத்தில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி பிரதம அதிதியாகவும்
விசேட அதிதியாக ஜோர்தான் நாட்டுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஏ.எல்.எம்.லாபிர் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
கௌரவ அதிதிகளாக கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.நசூஹர்கான், கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகளான டாகடர் எம்.எச்.எம்.றிஸ்வி, டாக்டர் ஏ.எம்.எம்.அஜீத், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் ஏ.ஜீ.முகம்மது பஸால் ஆகியோர் கலந்து கொண்டனர்
நூல் நயவுரையை ஆசிரியர். எச்.எம்.மன்சூர்
அல் ஹித்மதுல் உம்மா பவுண்டேசன் இந்நூலுக்கான அனுசரணையை வழங்கினர்.
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 25 இலக்கிய ஆளுமைகளின் வரலாற்றுக் குறிப்புகளை இந்நூல் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment