(அப்துல்சலாம் யாசீம்)
மத்திய வங்கியில் செய்த மோசடியை மறைக்கவே ஐக்கிய தேசிய கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் தேசிய நிகழ்ச்சி திட்டத்துக்கான திருகோணமலை மாவட்டக் கூட்டம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (31) இடம்பெற்றதையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
சீனி மோசடி மற்றும் தேங்காய் எண்ணெய் மோசடி குறித்து அரசு எடுத்த நடவடிக்கை என்ன என திருகோணமலை ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்விடயத்தை அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர்கள் இவ்விடயமாக தெளிவாக கூறியிருக்கிறார்கள்.இவ்விடயம் தொடர்பாக தெளிவாக விசாரணை செய்யப்பட்டு இந்த விசாரணையின் பொழுது ஏதாவது குற்றமொன்று இழைத்திருக்கப்படுமாயின் அவர்கள் அதற்குரிய முறையில் விசாரணைகள் நடாத்தப்பட்டு தண்டனைகளை பெறுவார்கள்.
மத்திய வங்கியில் செய்த மிகப்பெரிய மோசடியை மறைக்கவே இவர்கள் தொடர்ச்சியாக இக்குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.
அத்துடன் அதிமேதகு ஜனாதிபதி இது குறித்து மக்களுக்கு தெளிவு இருக்கின்றார் இந்த குற்றங்களில் சம்பந்தப் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளியாக காணப்பட்டால் தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
No comments:
Post a Comment