157வது பொலிஸ் தினம் திருகோணமலையிலும் அனுஷ்டிப்பு - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

157வது பொலிஸ் தினம் திருகோணமலையிலும் அனுஷ்டிப்பு

Share This

 


(அப்துல்சலாம் யாசீம்)


இலங்கை பொலீஸ் திணைக்களத்தின் 157 வது பொலிஸ் தினம் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உதய ஹேமந்த தலைமையில் இன்று (21)  இடம் பெற்றது.

1864 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ம் திகதி சஹான் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் இருந்தபோது உயிரிழந்ததாகவும் அகழி நினைவுகூறும் விதத்திலும் 3137  பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 1610 பேர் காயமடைந்துள்ளதாகவும் இவர்களை ஞாபகம் ஊட்டும் விதத்தில் இந்நிகழ்வு அனைத்து இடங்களிலும் இடம்பெற்று வருவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இதன்போது தெரிவித்தார்.


இதேவேளை உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட  பொலீஸ் மாற்றுத் திறனாளிகள் 50 பேருக்கு உலர் உணவுப் பொருட்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் தொடர்ந்தும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்பங்களுக்கும், மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கும் உதவிகளை வழங்க உள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இதன்போது சுட்டிக்காட்டினார்.












No comments:

Post a Comment

Pages