(அப்துல்சலாம் யாசீம்)
கஞ்சா போதைப்பொருள் மற்றும் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பெண்ணை எதிர் வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் ரந்திக்க லக்மால் ஜெயலத் முன்னிலையில் குறித்த பெண்ணை நேற்று (02) ஆஜர்படுத்திய போதே கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் திருகோணமலை-ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான ஜமால்தீன் சுமைரா (31வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
1997 எனும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட போது அவரிடமிருந்து 23 கஞ்சா பக்கெட் கைப்பற்றப்பட்டதாகவும் இரண்டு கிரேம் 98 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment