முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க. துரைரட்ணசிங்கம் காலமானார்!
திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் , கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபபட்டுள்ளது.
மறைந்த துரைரட்ணசிங்கம் 2001 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார்.
எனினும், அவர் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகாத போதிலும், கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சிவசிதம்பரம் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக 2002 ஜுன் மாதத்தில் துரைரட்ணசிங்கம் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டார்.
இதேவேளை, 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த முதலாவது அரசியல் தலைமை இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment