(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை- தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த இளைஞனுக்கு இன்று (30) பிற்பகல் மேற்கொள்ளப்பட்டு அன்டிஜன் பரிசோதனையின் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டவர் திருகோணமலை-தம்பலகாமம் -சிராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த (20 வயது) இளைஞர் எனவும் தெரியவருகின்றது.
குறித்த இளைஞர் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை விபத்து சேவைப் பிரிவில் உள்ள தனி அறைக்குள் வைக்கப்பட்டு வயிற்று வலிக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் இதனையடுத்து இவரை கொரோனா இடைநிலை சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் இவருடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்குறிய நடவடிக்கைகளை உள்ளதாகவும் விடயத்துக்கு பொறுப்பான வைத்திய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
No comments:
Post a Comment