(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மாவட்டத்தில் இன்று வரை 52 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 19 ஆண்கள், 12 பெண்கள் அடங்கலாக 31 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் நால்வர் மரணமடைந்துள்ளதாகவும்,
மாவட்டத்தின் மொத்த இறப்பு 91 ஆக அதிகரித்துள்ளது.
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால் இன்று (02) வெளியிடப்பட்ட கோவிட்-19 தொடர்பிலான அறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்
தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் புதிய தொற்றாளர்கள் 3 பேரும் மொத்தமாக 114 தொற்றாளர்களும்,
குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று வரை 223 தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ள நிலையில் புதிய தொற்றாளர்கள் 11 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் உப்புவெளியில் 02 பேரும் மொத்தமாக 680
திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 06 புதிய தொற்றாளர்களும் 1137 மொத்தமாக தொற்றாளர்களும் இன்றுவரை இனங்காணப்பட்டுள்ளனர்.
குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் ஒருவரும்,
மூதூரில் 05 புதிய தொற்றாளர்களும்,
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று வரை 404 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மூன்று புதிய தொற்றாளர்கள் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் பதவிசிறிபுர,
கோமரன்கடங்கடவெல,
கந்தளாய்,
சேருவில,
ஈச்சிலம்பற்று போன்ற பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் எவரும் தொற்றாளர்களாக இனங் காணப்படவில்லை எனவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
மேலும் 3456 பேர் இன்று வரை கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கம் இன்று வரை இனங்காணப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment