வன்னி ஹோப் அவுஸ்ரேலிய நிறுவனத்தின் நிதி அனுசரணையில் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் பெண்களுக்கான 850 சுகாதார பாதுகாப்பு பொதிகள் (01) மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம். ரீ. எம். பாரிசினால் வழங்கி வைக்கப்பட்டது.
கோவிட-19 தாக்கம் காரணமாக சுமாா் 32 நாட்கள் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பாலையயூற்று மற்றும் முருகன்கோயிலடி பிரதேசங்களில் உள்ள பெண்களின் சுகாதார தேவையை நிவர்த்தி செய்யும் நோக்குடன் இந்த பொதிகள் வன்னி ஹோப் அவுஸ்ரேலிய நிறுவனத்தின் அவசரகால நிவாரண செயற்றிட்டத்தின் கீழ் வழங்கி வைக்கப்பட்டது.
பாலையூற்று அன்பின் பாதை சமூகம் எனும் சமூகமட்ட அமைப்பு விடுத்த விசேட வேண்டுகோளின் அடிப்டபடையில் இந்த சுாதார பொதிகள் வழங்கப்பட்டு முடக்க நிலையில் உள்ள பெண்களுக்கு இந்த பொதிகள் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment