(பதுர்தீன் சியானா)
திருகோணமலை-கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமாஜதீவு பகுதியில் ஆண் குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் இன்று (19) அதிகாலை மீட்கப்பட்டதாக தெரியவருகின்றது.
கிண்ணியா பொலிஸ் நிலையத்திற்கு இராணுவ புலனாய்வுத் துறையினர் வழங்கிய தகவலையடுத்து குறித்த குழந்தை மீட்கப்பட்டதாகவும் பிறந்து நாற்பத்தி ஐந்து நாட்களாக இருக்கலாம் எனவும் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தனர்.
கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஆண் குழந்தை தற்பொழுது கிண்ணியா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment