திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி சாந்திபுரம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து நேற்று (19) 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளொன்று சென்று கொண்டிருந்தபோது பின்புறமாக வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் தெரியவருகின்றது.
இவ் விபத்தின் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில் மற்றைய சைக்கிளில் பயணித்த நபரும் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் படுகாயமடைந்த 4 பேரும் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இதனையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இருவரை அனுப்பி வைத்துள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் மஹதிவுல்வெவ- புபுது புற பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையான பீ.ஜீ. சாந்த குணரத்ன (45வயது) அவரது மனைவியான பீ.ஜீ.விமலா ரஞ்சனி (42வயது) மற்றும் மகனான ரிவிது சதுஸ்க (15வயது) ஆகியோர் காயமடைந்துள்ளதாகவும் இதேவேளை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரான ஏ.எம்.சந்ரசேன (52வயது) ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இரண்டு சாரதிகளும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
ஆனாலும் குறித்த விபத்துடன் தொடர்புடைய நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment