முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் சடலமாக மீட்பு - பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி... - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் சடலமாக மீட்பு - பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி...

Share This


திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று பிரதேசத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் 

இன்று (20) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது 


நேற்று  இரவு  திருகோணமலை பாலையூற்று பிரதேசத்தில் தனது மனைவியின் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் முச்சக்கரவண்டியில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது 


திருகோணமலை சிங்கபுற பிரதேசத்தைச் சேர்ந்த ரவீந்திர வீரசிங்க (வயது 42)  என்பவரை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்  


மேலும் அவருக்கு மேற்கொண்டு அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் - 19 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உப்புவெளி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார் 


மேலும் அவருடன் தொடர்பை பேணி வந்த நபர்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது 

No comments:

Post a Comment

Pages