சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் தந்தை கைது - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் தந்தை கைது

Share This


கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர்  பகுதியில் பதிமூன்று வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிறுமியின் தந்தையை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இச் சம்பவம் நேற்று (30) இடம்பெற்றுள்ளது.


இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 38 வயது உடையவர் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.


தாய் வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்காக சென்றுள்ளதாகவும் சிறுமியின் தாயின் தங்கையின் வீட்டில் வசித்து வந்த போது சிறுமியின் தந்தை மதுபோதையில் வருகை தந்து சிறுமியை அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.


குறித்த சந்தேகநபர் கிண்ணியா பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 13 வயதுடைய சிறுமி தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கைது செய்யப்பட்ட தந்தையை திருகோணமலை நீதிமன்றில் இன்று (01)  ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.


1 comment:

  1. MGM Grand Hotel and Casino | DRM CD
    Casino 나주 출장마사지 and SkyPod | 충주 출장안마 MGM Grand Hotel and Casino 사천 출장샵 in Las Vegas, NV, United States, Reviews. MGM Grand Hotel 아산 출장안마 and 태백 출장샵 Casino (mgmgrand.com/hotels/casinos)

    ReplyDelete

Pages