திருகோணமலை மாவட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்கள் அதிகமாக செயற்படுத்தப்பட்டு வருவதால் வளங்கள் குறைவாகக் காணப்படுவதாக திருகோணமலை மாவட்ட தேசிய நிர்மாண சங்கத்தின் செயலாளர் குகதாசன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் மணல், மெடல்,கிரவல் மற்றும் சீமென்ட் போன்றவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஒப்பந்தகாரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலையில் சீமெந்து தொழிற்சாலையினை வைத்துக்கொண்டு ரூபா 1000 க்கு விற்பனை செய்யப்படும் சீமெந்து கருப்பு சந்தையில் ரூபா 1350 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் 22000 க்கு விற்பனை செய்யப்பட்ட மணல் 45000 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றம் சுமத்திய திருகோணமலை மாவட்ட தேசிய நிர்மாண சங்கத்தினர்
இவ்வாறானா கொள்ளையர்கள் இருக்கும் வரை நாட்டின் அபிவிருத்தியினை முன்னெடுக்க பெரும் கால தாமதம் ஏற்றப்படுவதாகவும் மேலும் இவ்வாறான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கான வளப்பற்றாக்குறையை அரசாங்கம் உடன் தீர்க்க வேண்டுமெனவும்,அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒப்பந்ததரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள காலம் குறுகிய காலமாக இருப்பதால் அதனை நீடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் ஒப்பந்ததாரர்களுக்கு கீழ் கூலி வேலை செய்து வருபவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கட்டட வேலைத்தளங்கள் மூடப் பட்டிருப்பதால் கூலி வேலை செய்பவர்கள் தொழில் இன்றி பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
No comments:
Post a Comment