திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ- அவ்வை நகர் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (20) மதிப்பிற்குரிய அருட்திரு தேவகுமார் தலைமையில் நடைபெற்றது.
திருகோணமலை சேகர மெத்தடிஸ்ட் தேவாலயங்கள் சார்பில் "பகிர்வோம் மகிழ்வோம்" எனும் நிகழ்ச்சி திட்டத்திற்கு திருச்சபை உறுப்பினர்கள் மற்றும் அருட் பணியாளர்கள் இணைந்து பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டது.
முதலாம் தரம் தொடக்கம் 11ஆம் ஆண்டு வரை கல்வி பயிலும் 43 மாணவர்களுக்கு இதன் போது கற்றல் உபகரங்கள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment