(பதுர்தீன் சியானா)
திருகோணமலை- மொறவெவ பிரதேச சபை உறுப்பினரொருவர் வால்வெட்டு தாக்குதலினால் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (21) திகதி மாலை இடம் பெற்றுள்ளது.
குறித்து பிரதேச சபை உறுப்பினரை தாக்கிய சந்தேக நபர் முச்சக்கர வண்டியில் வருகை தந்துள்ள நிலையில் முற்சக்கர வண்டியை விட்டு தப்பி ஓடி உள்ளதாகவும் தெரிய வருகிறது.
குறித்த சம்பவத்தில் மொரவெவ - நாமல்வத்த பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே காயமடைந்துள்ளார்.
அரசியல் கூட்டம் ஒன்றிற்கு சென்று வீடு திரும்பி கொண்டிருக்கின்ற வேலையில் முச்சக்கர வண்டியில் வருகை தந்த குறித்த சந்தேக நபரை வாளால் வெட்டியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
வால் வெட்டுக்கு இலக்கான குறித்த பிரதேச உறுப்பினர் 1990 வண்டி மூலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.
குறித்த சம்பவம் குறித்து மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக வீடியோவை பார்க்க TrincoLive யூடியுப் பக்கத்திற்கு செல்லவும்
No comments:
Post a Comment