நுணுக்கமான முறையில் கஞ்சா செடிகளை வளர்த்த சந்தேக நபர் திருகோணமலையில் கைது! - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

நுணுக்கமான முறையில் கஞ்சா செடிகளை வளர்த்த சந்தேக நபர் திருகோணமலையில் கைது!

Share This

திருகோணமலை மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வீடியோ வடிவில் Trincolive யூடியுப் பக்கத்திற்கு சென்று சஸ்ப்கிரைப் செய்யவும்!


(அப்துல்சலாம் யாசீம்)

 நுணுக்கமான முறையில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டொமைன், கோணேசபுரி,  என்ற முகவரியில் அமைந்துள்ள காணியில் கஞ்சா தோட்டம் ஒன்றை வளர்த்து வருவதாக திருகோணமலை மாவட்ட அரச புலனாய்வு சேவை பணியகத்திற்கு கிடைத்த தகவலின் பேரில், இந்த வீட்டின் பின்புறம் மிக நுணுக்கமாக பயிரிடப்பட்டிருந்த 08 கஞ்சா செடிகள் (உயரம் 08 அங்குலம் முதல் 05 அடி வரை) மற்றும் 1 கிலோ 361 கிரேம்  காயவைத்த நிலையில் கஞ்சா செடிகளை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேகத்தின் பேரில் திருகோணமலை- பாலையூற்று  முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த 
 ஒகஸ்டின் அனிஸ்டலன் (வயது 41) என்பவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 
 இந்த கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட வீட்டில் Resident Of Fernando என்ற தங்குமிடம் இயங்கி வந்ததாகவும், மேற்குறிப்பிட்ட சந்தேக நபர் மட்டுமே இங்கு இருந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை  போதைப்பொருள் கட்டளைச் சட்டத்தின் 54 (அ) பயிர்ச்செய்கை மற்றும் கஞ்சா போதைப் பொருட்களை தம் வசம் வைத்திருந்தமை ஆகிய குற்றங்களின் கீழ் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர் 





No comments:

Post a Comment

Pages