இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவருடன் எம் எஸ் தௌபீக் எம்.பி சந்திப்பு! - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவருடன் எம் எஸ் தௌபீக் எம்.பி சந்திப்பு!

Share This



திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் மற்றும் இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமௌட் நஸீர் அல்டசான் அல்கதானி ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று சவூதி அரேபியத் தூதரகத்தில்  (11) இடம்பெற்றது.

சவூதி அரேபியாவிற்கும், இலங்கைக்குமான நீண்டகால உறவு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் இச்சந்திப்பின் போது நினைவுபடுத்தியதுடன் கடந்த காலங்களில் இலங்கை மக்களுக்கு உதவியதற்காக தனது நன்றிகளையும் தெரிவித்தார்.

இதன் போது, திருகோணமலை மாவட்ட மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள், அவர்களின் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் மீன்பிடி, விவசாயம் என்பன குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இவைகளுக்கு நியாயமான தீர்வுகளைப் பெற்றுக் தருவதற்கு முயற்சிப்பதாகவும். அத்தோடு உரியவர்களுக்கு தங்களது பிரச்சனைகளை முன்வைப்பதாகவும் சவூதி அரேபியத் தூதுவர் இதன்போது தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Pages