ஆளுநர் அலுவலகத்தில் இருந்து கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் இன்று (16) மாலை உத்தியோகபூர்வமாக வெளியேறினார்.
தமது அலுவலகத்தில் கடமையாற்றிய ஊழியர்களை சந்தித்ததுடன் அவர்கள் வழங்கிய பிரியாவிடையை அடுத்து சொந்த வாகனத்தில் அவர் பயணித்ததையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.
நாட்டின் பொருளாதார கஷ்ட நிலை ஏற்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கிலேயே தாம் இன மத வேறுபாடு இன்றி அனைவர்களுடனும் சிநேக பூர்வமாக தமது கடமைகளை செய்ததாகவும் தமக்கு வழங்கிய ஆதரவை தாம் எப்போதும் மறக்கப் போவதில்லை எனவும் அனைத்து மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் ஊடக சந்திப்பொன்றையும் நடாத்தியதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment