தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் சந்திப்பு - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் சந்திப்பு

Share This

 


இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், தோட்ட உட்கட்டமைப்பு, நீர்வழங்கல் வசதிகள்  அமைச்சர்  ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனை அவரது இல்லத்தில் நேற்று (24)  சந்தித்து, நலம் விசாரித்தனர்.


இதன்போது, மறைந்த தலைவர்களான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், அமரர் ஆறுமுகம் தொண்டமான் ஆகியோரின் காலத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இருந்த வலுவான உறவு குறித்து சம்பந்தன்  நினைவூட்டினார்.

இச்சந்திப்பின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான  சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்  சாணக்கியன்  இராஜமாணிக்கம்  ஆகியோரும் கலந்துகொண்டனர். 

 இச்சந்திப்பின்போது கிழக்கு மாகாணத்தின் சமூக, பொருளாதார அபிவிருத்திகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment

Pages