திருகோணமலை-நொச்சிக்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ராசதுரை சுதாகரன் (27வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரிய வருவதாவது-குடும்ப தகராறு காரணமாக மனைவி தனது பிள்ளையுடன் மட்டக்களப்பில் வாழ்ந்து வந்துள்ளதாகவும் தொலைபேசியில் இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞர் தூக்கில் தொங்கி இருக்கலாம் எனவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
இருந்த போதிலும் குறித்த சடலத்தை திருகோணமலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எஸ்.எம்.றூமி பார்வையிட்டதுடன்,பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.
No comments:
Post a Comment