முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் ஆறாவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு
விசேட துஆ பிரார்த்தனை நிகழ்வு..! நாபீர் பௌன்டேஷன் ஏற்பாடு.
(எஸ். சினீஸ் கான்)
எமது மண் என்றும் நன்றியோடு நினைவு கூற வேண்டிய மாமனிதர் முன்னாள் அமைச்சர் கலாநிதி அல்ஹாஜ் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் ஆறாவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு
விசேட துஆ பிரார்த்தனை நிகழ்வு
நாபீர் பௌன்டேஷன் தலைவர் UK நாபீர் அவர்களின் வழிகாட்டலின்கீழ் செவ்வாய்க்கிழமை (26) நாபீர் பௌன்டேஷன் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வை ECM நிறுவன பொது முகாமையாளர் ACA. இஸ்மாயில் தலைமைதாங்கி நடாத்தியதோடு, விஷேட அதிதியாக முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் புதல்வர் றஹ்மத் மன்சூர் கலந்து சிறப்பித்தார் .
இந்நிகழ்வில் சொற்பொழிவு மற்றும் துஆ பிரார்த்தனை கண்ணியத்திற்குரிய உலமா உஸ்தாத் ஸபா முகம்மது ஆலிம் நஜாஹி முகத்தமுல் காதிரி அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் உலமாக்கள், அதிதிகள், ஊர்பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment