அரசியல் இல்லாமல் சமூகத்தை கட்டி எழுப்ப முடியாது-சிவநேசத்துரை சந்திரகாந்தன் - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

அரசியல் இல்லாமல் சமூகத்தை கட்டி எழுப்ப முடியாது-சிவநேசத்துரை சந்திரகாந்தன்

Share This


அரசியல் இல்லாமல் சமூகத்தை கட்டி எழுப்ப முடியாது- சமூகத்திற்காக பணியாற்றக் கூடியவர்களை இப்போதே கண்டுபிடித்து தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிகளுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என சிவநேசத்துரை  சந்திரகாந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை கிரீன் வீதியில் அமைந்துள்ள கூட்டுறவு  சபை மண்டபத்தில் இன்று (27) கட்சி உறுப்பினர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.


 இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

https://youtu.be/OlwbcHA1MK4


மேலும் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ஒருவர் அரசியலுக்கு வரும்போது கட்சியின் கொள்கைகளை அறிந்திருக்க வேண்டும். மாகாண சபை முறைகளை அறிந்திருக்க வேண்டும். சர்வ கட்சி கூட்டம் ஏன் நடந்தது. கிழக்கு மாகாண சபையில் விட்ட விலை என்ன போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும் அப்படி அறிந்திருக்கும் பட்சத்தில் மாத்திரமே அரசியலில் செல்வாக்கு செலுத்த முடியும்.


கரண்ட் போனால் ஜெனியை கொடுத்தால் லைக் பத்தும் என தெரிந்திருக்க வேண்டும். அதே போல தான் அரசியலுக்கு அவர் படித்து வரும்போது மாகாண சபை முடிந்து விடும். அந்த நேரம் சொல்லுவார்கள் முதல் தடவை தானே நாங்கள் சென்றோம் இரண்டாவது தடவை பார்ப்போம் என கூறுவார்கள்.


அப்படியானவர்கள் அரசியலுக்குத் தேவையில்லை. சிறந்த சமூக உணர்வுடன் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சில செயற்பாடுகளை கிராம மட்டத்தில் முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் எமக்கு முன்னோக்கிச் செல்ல முடியும் எனவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் நியமனங்களை வழங்கி வைத்து உரையாற்றும்போதே இவ்விடயங்களை குறிப்பிட்டார்.



இதன் போது கட்சியின் செயலாளர் பொருளாளர் மற்றும் மாவட்ட இணைப்பாளர்கள் பிரதேச இணைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




No comments:

Post a Comment

Pages