மான்களுக்கான இயற்கை உணவை வழங்கும் நோக்குடனும், சுற்றுலா துறையினை ஊக்குவிப்பதற்காகவும் மான்களுக்கான உணவு விற்பனை நிலையம் திருகோணமலை மான் பூங்காவில் திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கு அமைய கிழக்கு மாகாண சுற்றுலா துறை தவிசாளர் மதனவாசன் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க திருகோணமலை நகராட்சி மன்ற செயலாளர் திரு. ஏ.ராஜசேகர் அவர்களது ஆதரவோடு Trinco Aid நிறுவனத்தினால் Lion Club of Trincomalee Town, Lion Club of Centennial Paradise ஆகிய நிறுவனங்களின் உதவியுடன் இவ் விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment