திருகோணமலை -கோமரங்கடவல பகுதியில் இடம் பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (08) அதிகாலை இடம் பெற்றுள்ளது.
கோமரங்கடவல திரியாய் சந்தியில் உள்ள விகாரையொன்றில் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இசை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சென்ற மொறவெவ -மயிலகுடாவ பகுதியைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஐவர் காயமடைந்த நிலையில் நான்கு பேர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மஹதிவுல்வெவ மற்றும் -கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களை மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
இதே வேளை குறித்த மோதலில் காயம் அடைந்த 19 வயதுடைய யுவதி மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment