கிண்ணியா-உப்பாறு வைஷ்ணவி வித்தியாலய மாணவர்களுக்கு திருகோணமலை ரோட்டரி கழகத்தினால் கற்றல் உபகரணங்கள் (10) வழங்கி வைக்கப்பட்டது.
கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட பின் தங்கிய கிராமப்புற பாடசாலை மாணவர்களின் நலன் கருதி அவுஸ்திரேலியாவை சேர்ந்த விக் மற்றும் கரேன் ஆகியோரின் நிதி அனுசரணையில் குறித்த பாடசாலை கல்வி பயிலும் 69 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்நிகழ்வில் திருகோணமலை ரோட்டரி கழகத்தின் தலைவர் எஸ் சௌந்தரராஜன் மற்றும் கழக அங்கத்தவர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
முதலாம் தரம் முதல் ஒன்பதாம் ஆண்டு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கே கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment