இஸ்ரேல் ஹமாஸ் போர் இடம் பெற்று வரும் நிலையில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட உயிர்கள் பலியாகியும் உள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையின் ஊடகப் பேச்சாளர் டேனியல் ஹகாரி இன்று தெரிவிக்கையில்,
காசாவில் 241 இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பணயக் கைதிகள் ஹமாஸ் போராளிகளின் பிடியில் உள்ளனர். இதற்கு முன்பு 242 என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த எண்ணிக்கை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த எண்ணிக்கை இறுதியானது அல்ல. அந்த பகுதியில் இராணுவ விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கையில், இதற்கு முன் விடுவிக்கப்பட்ட 4 பணயக் கைதிகள் மற்றும் படையினரால் மீட்கப்பட்ட இராணுவ வீரர் ஒருவரோ அடங்கமாட்டார்கள் என தி டைம்ஸ் ஆப் இஸ்ரேல் அறிக்கை தெரிவிக்கின்றது
No comments:
Post a Comment