தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம் - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்

Share This



நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (03.11.2023) தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 653,498.04 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இது சிறு உயர்வு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 654,806 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,100 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 184,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.


22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 169,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,180 ரூபாவாக பதிவாகியுள்ளது.இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,220 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 161,700 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.

எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Pages