திருகோணமலை மாவட்ட சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் Aurelia secrets நிறுவனத்தின் அனுசரணையுடன் அழகு சாதன கலை தொடர்பான ஒரு நாள் பயிற்சிநெறியானது நேற்று (03) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொள்ள வந்திருக்கின்ற பயிற்சியாளர்கள் அனைவரும் முழுமையாக பயிற்சி நெறியில் கலந்து கொண்டு என்னென்ன விடயங்கள் உங்களுக்காக பயிற்சி அளிக்கப்படுகின்றதோ அவ்விடயங்களை பொறுமையாகவும் நிறைவாகவும் பெற்றுக் கொண்டு பயிற்சிநெறியை பூரணமாக முடித்துக் கொள்ளுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது கூறினார்.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.சுதாகரன், சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உதவிப்பணிப்பாளர், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் உதவிப்பணிப்பாளர், திருகோணமலை மாவட்ட அழகுக்கலை சங்க தலைவர், திருகோணமலை மாவட்ட சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்கள், மாவட்ட Aurelia secrets நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment