திருகோணமலை-தென்னை மரவாடி ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினால் நிரந்தர வீடுகள் இன்றி தவிர்க்கும் மக்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
நாட்டில் பொருட்களின் விலை உயர்வின் நிமித்தம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் "ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது இப் புதிய ஆண்டிலும் தன்னுடைய உன்னதமான பணிகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில் நிரந்தர வீடுகளின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமையானது அரச அதிகாரிகள் மட்டத்தில் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது.
அந்தவகையில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 135வது இல்லமும் PLEDGE TO RESTORE FOUNDATION இனால் நான்காவது இல்லத்திற்கான அடிக்கல்லும் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள மிகவும் பின் தங்கிய எல்லை கிராமமான தென்னைமரவாடி பகுதியில் பல்வேறான இன்னல்களுடன் வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த குடும்பத்திற்கே இவ்வாறான வீட்டு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதி உதவியை அவுஸ்திரேலிய மற்றும் இலங்கையில் செயற்படுகின்ற PLEDGE TO RESTOREFOUNDATION இனது ஸ்தாபகர் வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment