திருகோணமலை மாவட்டத்தில் தற்போது AHRC நிறுவனம் காணி உரிமை தொடர்பில் கிராமங்களுக்கு கிராமம் சென்று மக்களை தெளிவூட்டும் விதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் காணி தொடர்பிலான விடயங்களை கையாளும் அரச அதிகாரிகள் அச்சத்தில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக மாவட்டத்தில் பின்தங்கிய கிராமிய மக்களின் காணிகள் தொடர்பில் அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன நிலையில்
AHRC நிறுவனம் மக்களை காணிகள் தொடர்பில் விழிப்புணர்வு செய்யும் நோக்கில் பல்வேறுபட்ட திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (27) வாகரை மூதூர் பிரதேச செயலயாலர் பிரிவின் கீழ் உள்ள சம்பூர் கிராம மக்களுக்கான காணி உரிமை தொடர்பான தெளிவினை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
தற்காலத்தில் காணி பிணக்குகளால் பலதரப்பட்ட சவால்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் இச்சவால்களுக்கு முகம்கொடுக்கும் மக்களுக்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்கும் வகையில் இக்கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இக்கலந்துரையாடலில் சம்பூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மற்றும் AHRC நிறுவனத்தின் இணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா, பிரதி இணைப்பாளர் அழகுராஜா மதன், PCCJ இணைப்பாளர் கிருஷாந் உட்பட உத்தியோகத்தர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment