கல்வி அமைச்சும் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் இணைந்து நடைமுறைப்படுத்தும் மாணவர் தூதுவர் தீர்வு மாநாடானது இன்று (29) திருகோணமலை மாவட்ட பிரதம கணக்காளர் ப.ஜெயபாஸ்கர் தலைமையில் மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலை மட்ட சிறுவர் பாதுகாப்பு சவால்களை அடையாளப்படுத்தி அவற்றிற்குரிய தீர்வுகளை வழங்கும் செயற்பாடுகள் இதன்போது மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் மு.மு.மு.ஸம்ஸீத், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், மாணவ தலைவர்களுக்கான பொறுப்பாசிரியர்கள், சிரேஸ்ட மாணவ தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment