திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் வைத்து இலஞ்ச ஊழல்கள் ஆணைக் குழுவினால் கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜனை எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எஸ்.சாஹிர் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடந்த 22 ஆம் திகதி காசி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை சம்மந்தமாக சிறு குற்றப்பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இம்முறைப்பாட்டை விசாரணை செய்து பணத்தை பெற்றுத் தருவதாக கூறி பொலிஸ் சார்ஜன் முறைப்பாட்டாளரிடம் ஐயாயிரம் ஆயிரம் ரூபாய் பணத்தை பொலிஸ் நிலைய சிற்றுண்டிசாலைக்கு அருகில் வைத்து பெற்றுள்ளார்.
இதேநேரம் இலஞ்ச ஊழல்கள் ஆணைக் குழுவின் அதிகாரிகள் முன்னிலையில் குறித்த பொலிஸ் சார்ஜன் கைது செய்யப்பட்ட நிலையில் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதையடுத்து திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
குறித்த பொலிஸ் சார்ஜனை எதிர்வரும் 27ம் திகதி கொழும்பு பிரதான நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் பதில் நீதவான் ஏ.எஸ்.சாஹிர் கட்டளையிட்டார்.
இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ மற்றும் கோமரங்கடவல பொலிஸ் நிலையங்களில் ஏற்கனவே குற்றங்களுடன் தொடர்புடைய அப்பாவி மக்களை பயமுறுத்தி பொலிஸார் பணம் சம்பாதித்து வருவதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத பாதிக்கப்பட்ட நபரொருவர் தெரிவித்தார்.
அத்துடன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களை வீடுகளுக்கு தேடி வந்து உங்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையங்களுக்கு வரவழைத்து போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக மீண்டும் பொய்யான வழக்குகளை பீ.அறிக்கையூடாக சமர்பித்து வருகின்றனர்.
ஆனாலும் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் பிணை எடுப்பதற்காக பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,அப்படி பொலிஸாருக்கு பணம் கொடுக்காமல் இருந்தால் எதிர்ப்பினை வெளிப்படுத்துவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்துவதற்கு புலனாய்வு பிரிவை உருவாக்க வேண்டும் என புத்திஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
No comments:
Post a Comment