வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அவர்கள் இன்று (24) திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக மாவட்ட செயலகத்தில் வைத்து தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரான இவர், கடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில்
போட்டியிட்டு 38368 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.
இவர் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர், புதிய அரசாங்கத்தின் முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று இவரின் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment